திவாகரன் சொல்லித்தான் ரிஷியூரில் வீட்டை இடித்தோம்-பொக்லைன் உரிமையாளர் வாக்குமூலம்
திருவாரூர்: சசிகலாவின் தம்பியான திவாகரன் சொல்லித்தான் கஸ்தூரியின் வீட்டை இடித்தோம் என்று பொக்லைன் உரிமையாளர் சங்கர் என்பவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடு ஆகியவை, திவாகரனின் தூண்டுதலின்பேரில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து தள்ளப்பட்டதாக பாலசுப்ரமணியத்தின் மனைவி கஸ்தூரி கடந்த 21ம் தேதி திருவாரூர் எஸ்பி சேவியர் தன்ராஜிடம் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில், போலீசார் சசிகலா தம்பி திவாகரன், ரிஷியூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமேனன், அதிமுக பிரமுகர்கள் தமிழ்ச்செல்வன், குணசேகரன், தியநாதன், கணேசன், ராஜேந்திரன் உள்பட 9 பேரை தேடிவருகின்றனர்.
இதில் முதல் கட்டமாக பொக்லைன் உரிமையாளர் சங்கர், டிரைவர் சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையின் போது, திவாகரன் உத்தரவின்பேரில்தான் ரிஷியூர் பாலசுப்ரமணியத்தின் வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடுகளை பொக்லைன் உதவியுடன் இடித்து தள்ளினோம். வீட்டை இடிக்கும்போது ரிஷியூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமேனன், அதிமுக பிரமுகர்கள் தமிழ்ச்செல்வம், குணசேகரன், வைத்தியநாதன், கணேசன், ராஜேந்திரன் ஆகியோர் கடப்பாரை மற்றும் அரிவாளுடன் அங்கு இருந்தனர் என்று சங்கர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதை வைத்து திவாகரனுக்கு எதிரான பிடியை போலீஸார் இறுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications