குப்பை தொட்டியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்+இந்திய ஜனநாயகம்!
நெல்லை: நெல்லையில் குப்பை தொட்டியில் நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இதையடுத்துள்ள கிடங்கில் குப்பையோடு குப்பையாக நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன.
இவை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி, அம்பை, பாளையங்கோட்டை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு உரியவை. அவற்றில் அரசு ஹோலோகிராம் முத்திரையும், தேர்தல் அதிகாரியின் கையொப்பமும் தெளிவாக உள்ளன.
இவை ஒரிஜினலா அல்லது அதே அதுபோல் தயாரிக்கப்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டைகளா, இவற்றை யார் குப்பை தொட்டியில் கொட்டியது என்பது புதிராக உள்ளது. பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு பின்பு தேவையில்லை என கைவிட்டிருந்தாலும் புத்தம் புதிதாக நூற்றுக்கணக்கில் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இரு மாவட்ட வாக்காளர் அடையாள அட்டைகளும் கணிசமாக உள்ளன. எனவே கடந்த சட்டசபை தேர்தலில் கள்ள ஓட்டு போட பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
இது குறித்து நெல்லை கலெக்டர் செல்வராஜ் கூறுகையி்ல், வாக்காளர் அடையாள அட்டை குப்பை தொட்டியில் வீசியிருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. ஒருவேளை அதிகாரிகள் இதை செய்திருந்தால் அது மிகப்பெரிய குற்றமாகும். அடையாள அட்டை முக்கிய ஆவணமாகும். இதை பொறுப்பாக வாக்காளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது அதிகாரிகளின் தவறாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடு்மையமைக தண்டிக்கப்படுவர் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications