ஆளுநர் உரை எதிர்பார்த்தது போல இல்லை-விஜயதாரணி ஏமாற்றம்!

ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ஆளுநர் உரை காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது போல இல்லை. மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களில் தெளிவு இல்லை என்றார்.
புதிதாக ஏதுமில்லை-சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் செளந்தரராஜன் பேசுகையில், ஆளுநர் உரையில் சொல்லிக்கொள்ளும்படி புதிதாக எதுவும் இல்ைல. ஏற்கனவே முதல்வர் அறிவித்த திட்டங்களின் தொகுப்பாகவே உள்ளது. கூடங்குளம் குறித்து எதுவும் இல்லை.
தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு குறித்த திட்டங்கள் ஏதும் இல்லை. மின்சாரப் பற்றாக்குறை தொடரும் நிலையே உள்ளது. அதைத் தீர்க்க திட்டங்கள் இல்லை என்றார்.
ஏமாற்றம் தருகிறது-காடுவெட்டி குரு
பாமக உறுப்பினர் காடுவெட்டி குரு கூறுகையில், இந்த ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு நிரந்தரத் தீர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு இல்லை என்றார்.
சரத்குமார் வரவேற்பு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆளுநர் உரையை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தை நாட்டிலேயே முன்னணி மாநிலமாக மாற்ற பல நல்ல முன்னேற்றத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்காக முதல்வரை நான் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன் என்றார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications