ராடியா டேப்புகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளன: மத்திய அரசு

பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் கார்பரேட் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நீரா ராடியாவும் உதவியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து அவர் தொலைபேசியில் பேசிய டேப்புகள் ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2ஜி ஊழல் வழக்கில் அவர் சாட்சியாக மட்டும் தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த டேப்புகள் மாற்றம் செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் நீதிபதி ஜி.எஸ். சிங்வி அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் சர்வீஸ் புரொவைடர்கள் உள்பட 8 முதல் 10 ஏஜென்சிகளுக்கு தொடர்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிக்கையின் முதல் சில பக்கங்களை நீதிபதிகள் வாசித்து பார்த்தனர்.
டேப்புகளில் உள்ள பேச்சின் துவக்கமும், இறுதியும் ஒரிஜினல் டேப்புகளில் இருந்து வேறுபடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கே இந்த டேப்புகளை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி, அவரது தாயார் ராசாத்தி அம்மாள், ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்களுடன் ராடியா பேசுவது போன்ற டேப்புகள் வெளியானபோது நாட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த டேப்புகள் அனைத்தும் தற்போது முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
எந்தெந்தப் பகுதிகள் மாற்றப்பட்டுள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அது வெளியானால் பல திருப்பங்களை ஸ்பெக்ட்ரம் வழக்கு சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைஷ்ணவி குழுமத்தின் உரிமையாளராக இருந்த நீரா ராடியா பின்னர் தனது தகவல் தொடர்பு ஆலோசனை பிரிவையே மூடுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications