சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்வது-கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
சென்னை: சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக தொடர்ந்து வெளிநடப்பு செய்து வந்தது. திமுகவினருக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் இந்த வெளிநடப்பு.
இந்த நிலையில் நேற்று இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போதும் திமுக ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
இந்தக் கூட்டத் தொடர் 6 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரை முருகன் எம்.எல்.ஏ. உள்பட அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த அறிவுரைகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கினார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications