பிறந்த தேதி விவகார குழப்பத்துக்கு ராணுவமே காரணம்: சொல்கிறார் தளபதி வி.கே.சிங்

தில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, இந்த பிரச்னையில் தவறு ராணுவத்திடம்தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த வி.கே. சிங், அமைச்சர் அந்தோணி கூறுவது உண்மைதான். இப்பிரச்னைக்குக் காரணமே ராணுவம்தான் என்றார்.
மேலும் " பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிப்பதில் அளவு கடந்த கால தாமதம் செய்தது ராணுவ தலைமையகம்தான். ஒரு பிரச்னை 36 ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்புகிறதென்றால், எங்கோ தவறு உள்ளது என்பது புரிகிறது" என்றும் வி.கே.சிங் குறிப்பிட்டார்.
ராணுவத்தின் இரு பிரிவுகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும் என்றும் சிங் குறிப்பிட்டார்.
பிரச்சனை என்ன?
ராணுவத்தின் ஒரு பிரிவில் தலைமை தளபதியின் பிறந்த தேதி 1951 ஆம் ஆண்டு மே 10 என்றும் மற்றொரு செயலகத்தில் 1950 மே 10 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைமை தளபதி வி.கே.சிங் தமது பிறந்த தேதி 1951 மே 10 தான் என்று தெரிவித்துள்ளார். ஆனால் 1950 என்ற ஆண்டைத்தான் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய அரசு கூறியது.
இதனால் தளபதிக்கும், பாதுகாப்பு துறைக்கும் இடையே சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றது. இதைத் தொடர்ந்து ராணுவ தளபதியின் வயதை ஒரே மாதிரியாக பராமரிக்குமாறு மத்திய அரசு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications