For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடங்கியது போர்...விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எதிர்க்கட்சியான பின்னர் முதல் முறையாக அக்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை சபை தொடங்கிய சிறிது நேரத்திலேயே புயல் நிவாரண நிதி தொடர்பான விவாதத்தை தேமுதிக மீண்டும் கையில் எடுத்தது. அப்போது தேர்தல் வெற்றி தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் பேசினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தனர்.

அப்போது விஜயகாந்த் எழுந்து பேசும்போது அதிமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். முதல்வர் ஜெயலலிதாவும் எழுந்து குறுக்கிட்டு சவால் விட்டுப் பேசினார். இதற்கு தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பதிலுக்கு அதிமுகவினரும் குரல் எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தேமுதிக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற மார்ஷலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அவைக் காவலர்களுடன் உள்ளே புகுந்து தேமுதிக எம்.எல்.ஏக்களை -விஜயகாந்த் உள்பட - கூண்டோடு வெளியேற்றனர்.

தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்கள் கோஷமிட்டபடி வெளியேறினர்.

English summary
DMDK MLAs including opposition leader Vijayakanth were evicted from Assembly today. Speaker Jayakumar ordered the house Marshall to evict them after the house witnessed noisy scenes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X