விடாமல் பேசிய ஜெ. அன்பழகன்-வெளியேற்றிய அவைக் காவலர்கள்!
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகர் கூறியும் விடாமல் தொடர்ந்து பேசியதால் அவரை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அன்பழகன் பேசும் போது அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்தார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், செந்தில் பாலாஜி ஆகியோர் உடனுக்குடன் பதிலளித்தார்கள்.
இதைத் தொடர்ந்து சபையில் காரசார விவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சபையில் அவர் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இதையடுத்து அதிமுக உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரனை பேசுவதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார்.
பிரபாகரனும் பேச ஆரம்பித்தார். ஆனாலும் அன்பழகன் இருக்கையில் அமராமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவருடைய நேரம் முடிந்து விட்டது என்றும், அவர் அமர வேண்டும் என்றும் சபாநாயகர் பலமுறை எடுத்துக் கூறினார்.
அப்படியும் அவர் அமராமல் ஆவேசமாக அரசுக்கு சவால் விடும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அவர் இருக்கையில் அமராவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தும் அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து வேறு வழியின்றி சபாநாயகர் அவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு மார்ஷல் மற்றும் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். மார்ஷலும் அவைக் காவலர்களும் சென்று அன்பழகனின் கைகளை பிடித்து வெளியேற்ற முற்பட்டபோது, அவர்களின் கையை உதறி விட்டு அன்பழகன் சபையிலிருந்து வெளியேறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications