+2 பிராக்டிகல் தேர்வின்போது பவர் கட் கூடவே கூடாது-கல்வித்துறை அறிவுரை
சென்னை: பிளஸ் டூ செய்முறைத் தேர்வின்போது மின் தடை ஏற்படாத வகையில் முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு, செய்முறை தேர்வு வரும் 2-ம் தேதி தொடங்கி, 20ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
தேர்வை சரியான நேரத்தில் தொடங்க வேண்டும். தேர்வின்போது கருவிகள் சரியாக செயல்படாவிட்டால், புறத் தேர்வாளர், அகத்தேர்வாளர் கருவிகளை சரி செய்து கொடுத்து அல்லது மாற்றிக்கொடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முடிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
தேர்வு நடைபெறும்போது, புறத்தேர்வாளர்கள் தேர்வறையை விட்டு வெளியே செல்லக்கூடாது. தேர்வு முடிந்தபின் விடைத்தாள்களை துல்லியமாகவும், கவனமாகவும் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
புறத் தேர்வாளர் வழங்கும் மதிப்பெண் விவரங்களை எக்காரணம் கொண்டும் எவருக்கும் தெரிவிக்கக்கூடாது. புறத் தேர்வர்கள் மாணவ, மாணவிகளை கனிவுடன் நடத்த வேண்டும்.
தேர்வர்களை திட்டுவதோ, மனநிலை பாதிக்கும் விதத்தில் பேசுவதோ கூடாது. இயற்பியல் மற்றும் மின்சாரம் சார்ந்த செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாட்களில் மின்தடை ஏற்படாத வகையில், முன்கூட்டியே மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
செல்போன்களை தேர்வு அறைக்கு எடுத்து செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications