நீடாமங்கலம் காவல் நிலையத்தில் திவாகரன் மனைவி விசாரணைக்கு ஆஜர்

திருவாரூர் அருகே ரிஷியூரில் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான வீட்டை திவாகரனும் அவரது ஆதரவாளர்களும் இடித்தனர் என்பது புகார்.
இப்புகாரின் பேரில் திவாகரனை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் தப்பி ஓடி தலைமறைவான திவாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். திவாகரனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் திவாகரனின் மனைவி ஹேமலதா, மகன் ஜெய் ஆனந்த், மகள் அம்மு ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு திருவாரூர் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு தொடர்பாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்குள் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஹேமலதா நீடாமங்கலம் போலீஸ் நிலையம் சென்றார். அவரிடம் திவாகரன் பதுங்கி இருக்கும் இடம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் ரிஷியூர் கஸ்தூரி வீடு இடிப்பு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
நிர்வாண சாமியும் புகார்
இந்நிலையில் மன்னார்குடி சாமியார் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
திவாரகரன் தம்மை தாக்கி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டதாகவும் திவாகரன் கோஷ்டியிடமிருந்து தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மன்னார்குடி நிர்வாண சாமியார் முத்துராஜா தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
நிர்வாண சாமியும் திவாகரனும்
மன்னார்குடி நிர்வாண சாமியார் முத்துராஜாவை அப்பகுதி மக்கள் சித்தராக கருதி வழிபட்டு வருகின்றனர். சசிகலா கோஷ்டியை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்குவதற்கு முன்பாக முத்துராஜாவை திவாகரன் நேரில் சென்று பார்த்திருக்கிறார். திவாகரனுக்கு பிரச்சனைகள் வரும் என்று முத்துராஜா எச்சரித்ததாகவும் இதனால் கடுப்பான திவாகரன் அவரைத் தாக்கி மனநோயாளி எனக் கூறி சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
சசி கோஷ்டி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் முத்துராஜா மீண்டும் மன்னார்குடிக்கு திரும்பினார். இதுவரை மெளனம் காத்த முத்துராஜா இப்போது பாதுகாப்பு கோரி போலீஸிடம் மனு கொடுத்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications