விஜயகாந்துக்காகவும், பேச அனுமதிக்காததாலும் 2 முறை திமுக வெளிநடப்பு

அதேபோல தங்களது கட்சி உறுப்பினரை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி மீண்டும் ஒருமுறை வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையின் மாண்பு, கண்ணியம் குலையும் வகையில் நடந்து கொண்டதாக கூறி உரிமை மீறல் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை இன்று முதல் 10 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பியபடி வெளிநடப்புச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சபாநாயகரின் தீர்ப்பை கண்டிப்பதாக கூறி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
இதேபோல இடதுசாரி உறுப்பினர்களும் தீர்ப்பைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் திமுக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குத் திரும்பினர். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீ்ர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திமுக உறுப்பினர் கோவி செழியன் பேசினார். அவருடைய பேச்சில் பலமுறை அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினர். அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.
இதையடுத்து பேச அனுமதிக்க மறுப்பதாக கூறி திமுகவினர் மீண்டும் வெளிநடப்புச் செய்தனர்.












Click it and Unblock the Notifications