For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீடியாக்களின் கவனம் 2ஜி, சிதம்பரம் மீது திரும்பியதால் நிம்மதிப் பெருமூச்சில் மாயாவதி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி ஊழல் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிப்பது குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஊடகங்களின் கவனம் அவர் பின் சென்றது. இதனால் சற்றே லாபமடைந்தவர் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான்.

உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியின் நண்பரும், தொழில் அதிபருமான குர்ப்ரீத் சதா(எ) பான்ட்டி சதாவுக்கு சொந்தமான டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.4.5 கோடி முதல் ரூ.125 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து கேள்விப்பட்ட ஊடகங்கள் சதா மற்றும் மாயாவதி பற்றியே நேற்று முழுவதும் செய்தி வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் இது என்ன புது வம்பு என்று நொந்து போயிருந்த மாயாவதியை காப்பாற்றும் வகையில் வந்து சேர்ந்து 2ஜிவழக்கின் தீர்ப்புகள்.

2ஜி ஊழல் வழக்கில் நேற்று 3 முக்கிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கிய. முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா வழங்கிய அனைத்து 2ஜி உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியபோது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை விசாரிப்பது குறித்து விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஊடகங்களின் கவனம் ப.சிதம்பரம் பக்கம் திரும்பியுள்ளது. அவர்கள் மாயாவதி மற்றும் சதாவை மீடியாக்கள் கொஞ்ச நேரம் மறந்தனர். இதனால் மாயாவதிக்கும் நிம்மதிப் பெருமூச்சு விட நேரம் கிடைத்தது.

2 நாள் கழித்து மறுபடியும் மாயா பக்கம் மீடியாக்கள் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

English summary
All media channels, newspapers, websites on Thursday, Feb 2 were being overwhelmed with the news of Supreme Court's verdict on Chidambaram regarding 2G spectrum scam. All media have been busy showing Subramanian Swamy, Supreme Court, Chidambaram and opposition parties statements following the verdict of the apex court. However, one question may arise here - who was the gainer or who succeeded hide from the limelight on Thursday? Is it Uttar Pradesh Chief Minister Mayawati?On Wednesday, media was behind Mayawati and her friend and liquor baron - Gurpreet Chadha alias Ponty Chadha, whose residents and work places were raided by the Income Tax officers in UP and in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X