'சீரியஸ்' சட்டசபையில் 'ஷார்ட் ஜம்ப்... லாங் ஜம்ப்...' ஏற்படுத்திய சிரிப்பலை!
சென்னை: பஸ் கட்டண உயர்வை ஷார்ட் ஜம்ப் போல மெதுவாக உயர்த்தால் லாங் ஜம்ப் போல அரசு உயர்ததி விட்டது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ரங்கராஜ் கூற, அதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலால் சட்டசபையே குலுங்கிச் சிரித்தது.
தேமுதிக-அதிமுக மோதலால் அவையே இறுக்கத்தில் இருந்த நிலையில் இந்த கேள்வி, பதில் அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இறுக்கத்தை சற்றே தணித்தது.
சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கவர்னர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் என்று அவர் ஆரம்பித்தபோது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டார்.
அவர் பதிலளிக்கையில்,நாங்களும் மத்திய அரசிடம் எதிர் பார்த்து எதிர்பார்த்து கடைசியில் ஏமாற்றம் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய ரங்கராஜ், பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை நடத்த முடியாது. ஆனால் ஒரே அடியாக லாங் ஜம்ப் போல உயர்த்தி இருக்கக் கூடாது. ஷார்ட் ஜம்ப் போல கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, மத்திய அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஷார்ட் ஜம்ப்பாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வருகிறது. இதனால்தான் நாங்கள் வேறு வழியின்றி லாங் ஜம்ப்பாக உயர்த்தி வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூற அவையில் 'கொல்'லென்று சிரிப்பலை எழுந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications