For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி ஊழல்: ஊழல் கண்காணிப்பக ஆணையர்-சி.பி. ஐ இயக்குநர் விரைவில் ஆலோசனை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி ஊழலில் அடுத்த கட்ட விசாரணை தொடர்பாக ஊழல் கண்காணிப்பக ஆணையர் பிரதீப் குமார், சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி. சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இருவருக்கும் இடையேயான ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் நடைபெறக் கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

2ஜி ஊழல் வழக்கு விசாரணையைக் கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனு மீதான விசாரணையின் போது, இதுவரையிலான விசாரணைகள் தொடர்பான அறிக்கையை ஊழல் கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து இச்சந்திப்பு நடைபெற உள்ளது.

மேலும் இத்தகைய ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்தவும் இரண்டு அமைப்புகளும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் 2ஜ வழக்கில் 3 முக்கியத் தீர்ப்புகளை வழங்கியது. இந்தப் பின்னணியில் சிபிஐ இயக்குநரும், சிவிசியும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Central Vigilance Commissioner Pradeep Kumar has convened a meeting with CBI Director AP Singh to discuss the modalities and prepare a blue print for further investigations into the 2G scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X