கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் மீது நில அபகரிப்பு முயற்சி புகார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளான செல்வியின் மருமகன் ஜோதிமணி உள்பட 4 பேர் மீது சென்னை மதுரவாயல் அருகே உள்ள 28.77 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பட்டாபிராம் தெற்கு மாடவீதியில் வசிக்கும் எம்.ஆர்.ரமணன் என்பவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில்,
எனது தாய்வழி முப்பாட்டனாரின் தந்தை மறைந்த கே.சண்முக சுந்தர முதலியாருக்கு மதுரவாயல் கிராமத்தில் 28.77 ஏக்கர் பரப்பளவு உள்ள புஞ்சை நிலம் சொந்தமாக இருந்தது. 1875ம் ஆண்டு செட்டில்மெண்ட் அலுவலகத்தில் அதன் இயக்குனரால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கையை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
இந்த நிலத்தை சண்முகசுந்தர முதலியாரோ அல்லது அவரது வாரிசுகளோ இதுவரை யாருக்கும் விற்பனை செய்யவில்லை.
இந் நிலையில் ஜோதிமணி (செல்வியின் மகள் எழிலரசியின் கணவர்), கு.க.செல்வம், புல்லட் பாஸ்கர் மற்றும் ஜோதி ஆகிய நால்வரும் கூட்டு சதி செய்து இந்த நிலத்தை அவர்கள் வாங்கியது போல போலி ஆவணங்களை தயார் செய்து இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
எங்களுக்கு சொந்தமான இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் இந்த நால்வரையும் விசாரித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்த நான்கு பேரிடமிருந்து எங்கள் குடும்பத்தாரின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் எங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு எம்.ஆர்.ரமணன் அந்த மனுவில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications