காண்டிராக்டர் மிரட்டல் வழக்கு-ராவணன் ஜாமீன் மனு கோவை கோர்ட்டில் டிஸ்மிஸ்
கோவை: சசிகலாவின் உறவினர் ராவணனின் ஜாமீன் மனுவை கோவை செஷன்ஸ் கோர்ட் இன்று நிராகரித்து விட்டது.
கடந்த மாதம் 19-ம் தேதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த 12 பேரில் ராவணனும் ஒருவர். ராவணன், சசிகலாவின் சித்தப்பா மருமகன் ஆவார்.
இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்துள்ளன. அதில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதில் ஒன்று கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற ரவி என்கிற காண்டிராக்டரை மிரட்டி ரூ. 10 லட்சம் பணம் பறித்த வழக்கு.
ரவி கொடுத் புகாரின் பேரில் போலீஸார் ராவணனைக் கைது செய்தனர். அதேபோல ராவணனின் உதவியாளர் மோகனும் கைதானார். இதையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் கோவை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த கோவை கோர்ட் இருவரது ஜாமீன் மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில், ராவணன், மோகன் மீது ஜாமீனில் வெளியே வரவே முடியாத அளவுக்கு 6 வலுவான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications