உபியில் சாலை விபத்து: நிச்சயதார்த்த்திற்கு சென்ற 26 பேர் பலி, 12 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் மினி பஸ்ஸும், டிரக்கும் மோதிக் கொண்டதில் நிச்சயதார்த்தத்திற்கு சென்ற 26 பேர் பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் மணிப்பூரி மாவட்டத்தில் நேற்று மாலை அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ்ஸும், அதி வேகமாக வந்த டிரக்கும் பயங்கரமாக மோதியது. இதில் மினி பஸ் டிரைவர் உள்பட 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆக்ராவில் உள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களி்ல் 23 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து போலீசார் கூறியதாவது,

பல்பீர் சிங் யாதவ் என்பவரின் மகளின் நிச்சயதார்த்ததிற்காக மினி பஸ் நிறைய ஆட்கள் இடா மாவட்டத்தில் உள்ள நக்லா பிகாரி என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் வழியிலே அவர்களது வாகனம் டிரக்குடன் மோதியதில் 26 பேர் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர்.

அந்த மினி பஸ் ஒரு ஆரம்பப் பள்ளிக்கு சொந்தமானது என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+