உபியில் இன்று முதல்கட்ட தேர்தல்: கன மழையால் வாக்குப்பதிவு மந்தம்
லக்னோ: உத்தர பிரதசேத்தில் முதல் கட்டத் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அங்கு பலத்த மழை பெய்ததால் குறைவான அளவே வாக்குகள் பதிவாயின.
உத்தர பிரதேசத்தில் இன்று முதல் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு முதல் கட்டத் தேர்தல் துவங்கியது. இன்று சீதாபூர், பாரபங்கி, பைசாபாத், அம்பேத்கர் நகர், பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த் நகர் மற்றும் பஸ்தி ஆகிய 10 மாவட்டங்களில் 55 இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 1.70 லடச்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதிகளில் 862 பேர் களத்தில் உள்ளனர்.
காலை வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் மின்சாரமும் இல்லை. அதனால் குறைவான அளவு மக்களே மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர்.
பிற்பகல் வரை 42 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று அரசியல் கட்சிகள் எத்ரிபார்த்த நிலையில் மழை அவர்கள் நினைப்பை பொய்யாக்கிவிட்டது. இன்றைய தேர்தலில் கேபினட் அமைச்சர் லால்ஜி வர்மா, மாநில அமைசச்ர் சங்க்ரம் சிங் வர்மா, 31 எம்.எல்.ஏ.க்கள், 15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா உள்பட பல எம்.பிக்களின் உறவினர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 6,855 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியது என்று அறியப்பட்டு அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமான ஜவான்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஊழல் அரசை அகற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முனைப்பாக உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications