'நான் அவன் அல்ல': 2 பேருக்கு ஒரே செல்போன் நம்பர்!

தென்காசியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஒரு சிம் கார்டு வாங்கியுள்ளார். பின்னர் செல் நம்பரை மாற்றாமலேயே நிறுவனங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகு அவர் அதே நம்பருடன் மற்றொரு தனியார் செல் நிறுவனத்திற்கு மாறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பாலசுப்பிரமணியனின் எண்ணுக்கு கம்பத்தைச் சேர்ந்த பகவதிராஜ் என்ற பெயரைக் கேட்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அவர்களிடம் பாலசுப்பிரமணியன் தான் தென்காசியை சேர்ந்தவர் என்ற விபரத்தை கூறியுள்ளார். இதையடுத்து தொடர்பு கொண்ட நபர்கள் பகவதிராஜை நேரில் சந்தித்து விபரத்தை தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் பகவதி ராஜூம் தென்காசியில் உள்ள பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திரையில் தனது செல் நம்பரில் இருந்தே தனக்கு அழைப்பு வருவதை பார்த்து பாலசுப்பிரமணியன் அதிரிச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தான் கம்பத்தைச் சேர்ந்த பகவதிராஜுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஒரே எண் இருக்கும் விஷயம் தெரிந்து இருவரும் அதிர்ந்தனர். பகவதிராஜுக்கு அவுட் கோயிங் கால்கள் செல்லும்போது அதே வேளையில் இன்கமிங் கால்கள் அனைத்தும் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு வருகிறது. போனில் தொடர்பு கொண்ட பலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணியன் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications