பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்!-18ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு!

வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவுடன் வரும் அவர் இந்த முறை தனியாக வந்து ஆஜரானார். அதே போல இந்த வழக்கில் இளவரசியும் தனியே வந்து ஆஜரானார்.
கடந்த பல ஆண்டுகளாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சசியின் அண்ணி இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நிலுவை + இழுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நேரில் ஆஜராகி 4 நாட்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த சொத்துக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது அத்தனை புகார்களும் சசிகலா உள்ளிட்டோர் மீது திரும்பியுள்ளது. பெங்களூர் விசாரணைக்குப் பின்னர்தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே பெரும் பிரளயம் ஏற்பட்டு பிரிந்தனர். சசிகலா குடும்பமே கூண்டோடு நீக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று ஆஜரானார்.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும் என சசிகலா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியாகி விட்டது. இருப்பினும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா அப்பீல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவிடம் விசாரணை நடக்கவில்லை.
மீண்டும் வரும் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா பிரிந்த பின்னர் சென்னையிலேயே ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.
வழக்கமாக ஜெயலலிதாவுடன் தனி விமானத்தில் பெங்களூர் வரும் சசிகலா, இந்தமுறை சென்னையிலிருந்து காரில் வந்தார். அவருடன் எந்த கூட்டமும் வரவில்லை. நீதிமன்றத்தில் இளவரசியும், சசிகலாவும் பேசிக்கொண்டிருந்தனர்.
சசிகலா குடும்பம் துரத்தப்பட்டுவிட்டாலும், இளவரசி இன்னும் முதல்வரின் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications