சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: மதிமுக தனித்துப் போட்டி - வைகோ அறிவிப்பு!

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகர் விஜயசேஷ மகாலில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், "தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ம.தி.மு.க.வை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்துச் செல்வது என்றும் சங்கரன் கோவில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது," என்று வைகோ அறிவித்தார். பொதுக்குழுவில் இது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடக்கக்கூடாது. அணையை பாதுகாத்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய உடமை ஆக்க வேண்டும். அதற்கான சட்டத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
*தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
*மின்சார நிலமை முன்பு இருந்ததைவிட மோசமாகி உள்ளது. இந்த மின்வெட்டுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மின் கட்டணத்தை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது.
*அமராவதி, பவானி ஆற்றுநீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
*ஒரு டன் கரும்புக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
*தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
*திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
*ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
*மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
*பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில் மின் ஆளுமை முறையை பின்பற்ற வேண்டும்.
*படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
*சமச்சீர் கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
*அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது. கோட்டூர்புரத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும்.
*தமிழ்நாட்டில் ஊழலை அகற்றும் வகையில் லோக் ஆயுக்தா (ஊழல் விசாரணை மன்றம்) அமைக்க வேண்டும்.
*விஷவாயு விபத்துக்கு காரணமான டவ் கெமிக்கல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.
*கூடங்குளம் அணு மின்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனையை குறைக்க தமிழக அரசு அதிகார உரிமையை பயன்படுத்த வேண்டும்.
*இலங்கை தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இலங்கையில் தமிழர்களிடம் ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications