ஹெல்மெட் போடாவிட்டால் ரூ.300 அபராதம் : நெல்லையில் அமல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சனிக்கிழமை முதல் உடனடி அபராதம் விதிக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது உடனடியாக அபராதம வசூலிக்கும் ஸ்பாட் பைன் திட்டம் சென்னை, திருச்சி, கோவை மாநகர பகுதிகளில் மட்டும் ஏற்கனவே அமுலில் உள்ளது. தற்போது அனைத்து மாவட்டம் மற்றும் மாநகரங்களிலும் ஸ்பாட் பைன் விதிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உடனடி வசூல்

செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகத்தில் வாகனத்தில் செல்வது, பஸ் நிறுத்தங்களில் இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் பஸ்களை நிறுத்துவது வழிதடங்கள் மாறி வரும் தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள், போக்குவரத்து வீதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் பைன் விதிக்கப்படும். இதற்கான ரசீதை பொதுமக்கள் கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். இத்திட்டம் நெல்லை மாநகரில் பிப் 11ம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது. ஸ்பாட் பைனை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்களும், மாநகரத்தில் எஸ்ஐக்களும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளும் வசூலிக்கலாம். ஆனால் போலீசார் வசூலிக்க கூடாது. இதற்கான கருவிகள் இன்னும் வரவில்லை. இதனால் ரசீது புத்தகம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.300

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ.300 ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஸ்பாட் பைன் கிடையாது. ஏனெனில் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ சான்றிதழ் பெற்று நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு நீதிமன்றமே அபராத தொகையை வசூலிக்கும் என்று கருணாகரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+