ரூ.1.30 கோடி ரோஜா மலர் ஏற்றுமதிக்கு இலக்கு

ரூ1.30 கோடி மதிப்பிலான ரோஜா மலர் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ், காதலர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் அதிகளவில் ரோஜா மலர் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது, காதலர் தினம் வார விடுமுறையில், வராத நிலையிலும் இதன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
காதலர் தினத்திற்கு, பெங்களூருவில் இருந்து, 40 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படலாம்
முந்தைய நிதியாண்டில் ஏற்றுமதியை விட, இது 10 மடங்கு கூடுதலாகும்..
மலர் வியாபாரிகளும் முந்தைய ஆண்டின் விலையிலிருந்து, 10 முதல் 15 விழுக்காடு வரை உயர்த்தியே ஆர்டர் பெற்றுள்ளனர். இதனால் ஒரு ரோஜாவின் விலை ரூ12 முதல் ரூ25 வரை இருக்கக் கூடும்
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து, 286 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான, மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது மேலும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications