மின்வெட்டு பிரச்சினை : கரூரில் ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்!
கரூர் :தொடர் மின்வெட்டை கண்டித்து கரூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். விநோதமான இந்த போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் சுமார் 8 மணி முதல் 12 மணி நேரம் வரை தொடர் மின் வெட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் போன்ற பல தரப்பினரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், குளித்தலை அருகே லாலாபேட்டையில், தொடர் மின் வெட்டைக் கண்டித்து, ஆண்டியப்ப நகரில் தெருவிளக்கு கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி பொதுமக்கள் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்கள் மின்வாரிய உருவ பொம்மையை பெண்கள் விளக்குமாற்றால் அடித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
கீழக்கரையில் ஆர்பாட்டம்
இதனிடையே கீழக்கரையில் தொடர் மின்வெட்டை கண்டித்து கீழக்கரையில் அனைத்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கீழக்கரை புதிய பேரூந்து நிலையம் அருகில் நடைபெறும் இந்த ஆர்பாடத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, பாப்லர் பிரண்ட் ஆஃப் இந்தியா, முஸ்லிம்லீக் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தக சங்கங்கள், ஆட்டோ ஒட்டுநர் சங்கம், மீனவ சங்கம் மற்றும் கே.ஈ.சி.டி போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 36 அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications