தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் திமுக காணாமல் போய்விடும்-ராமதாஸ்

மதுரைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலிலேயே, தே.மு.தி.க. உடன் கூட்டணிக்கு தி.மு.க அடிகோலியது. ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது, அதற்கான நடவடிக்கைகளில் மீண்டும் தி.மு.க. இறங்கியுள்ளதாக தெரிகிறது. இக்கூட்டணி அமைந்தால், அது பெரும் சரிவை சந்திக்கும். வருங்காலங்களில், தி.மு.க.என்ற கட்சியே இல்லாமல் போகும்.
தமிழகத்தில் 30 சதவீத இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் அரசியலை, கொடியவர்களின் கூடாரமாக எண்ணி ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்நிலையை மாற்றி, இளைஞர்களை அதிகளவில் அரசியலில் ஈடுபடும் நடவடிக்கைகளை பா.ம.க மேற்கொண்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நியாயமாக மற்றும் நேர்மையாக நடைபெறாது என்பதன் காரணத்தினாலேயே, இத்தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதன் மூலம் மட்டுமே, முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கு தீர்வு ஏற்படும் என்றார் ராமதாஸ்.
தனது பேட்டியின்போது வழக்கம் போல, திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே வைக்க மாட்டோம் என்றும் சொல்லி வைத்தார் ராமதாஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications