For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 22 முதல் சென்னை - பாங்காங் நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது ஏர் ஏசியா!

By Shankar
Google Oneindia Tamil News

Air Asia Online Booking-For Free Tickets
சென்னை: தாய்லாந்தின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா நிறுவனம் சென்னையிலிருந்து பாங்காக்குக்கு அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி முதல் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இதற்கான டிக்கெட் விற்பனையை அந்நிறுவனம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதுபற்றி தாய் ஏர் ஏசியாவின் தலைமைச்செயல் அதிகாரி டாஸ்சபோன் பிஜ்லிவெல்ட் கூறுகையில், 'உலகிலேயே மிக குறைந்த கட்டண விமான சேவையை அளிக்கும் ஏர் ஏசியா தற்போது சென்னையில் இருந்து பாங்காக் மற்றும் தாய்லாந்துக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது.

இந்தியா தொடர்ந்து எங்களுக்கு முக்கிய சந்தையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்கு பயண தேவை அதிகரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து வாரத்தில் 5 நாட்கள் (திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு) சென்னையில் இருந்து பாங்காக்கிற்கு குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது' என்றார்.

வரும் மார்ச் தொடங்கி அக்டோபர் வரை சென்னை - பாங்காக் இடையே விமான கட்டணம் ரூ 6666 என ஏர் ஏசியா நிர்ணயித்துள்ளது.

English summary
The low-cost Thai airline AirAsia today announced the launch of its direct Chennai-Bangkok flights from March 22. Tickets went on sale online from today with an all- inclusive return fare of Rs 6,666 for travel during the 23 March-27 October period, an airline statement said here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X