சென்னைக் கொலை போல நடக்கும்...ஆசிரியரை மிரட்டிய 2 பிளஸ்டூ மாணவர்கள் கைது
நரிக்குடி: எங்களைக் கண்டித்தால், சென்னையில் வகுப்பறையில் ஆசிரியை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும் என்று ஆசிரியரை மிரட்டிய இரண்டு பிளஸ்டூ மாணவர்களால் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இருவரையும் ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
சென்னையில் ஆசிரியை உமா மகேஸ்வரியை, அவரது வகுப்பில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக வகுப்பறையில் வைத்துப் படுகொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய நிலையில் தற்போது அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி ஆசிரியர் ஒருவரை பிளஸ்டூ மாணவர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ளது மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளி. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை பிரேயர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு மாணவர்கள் பிரேயருக்கு வராமல் வகுப்பறையிலேயே இருந்தனர். மேலும் மேசையைத் தட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்து கோபமடைந்த ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் வகுப்பறைக்குச் சென்று அங்குதாளம் போட்டு கொண்டிருந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்துள்ளார். ஆனால் ஆசிரியரைக் கண்டு கொள்ளாத அந்த இரு மாணவர்களும், சென்னையில் ஆசிரியரைக் குத்திக் கொன்றது போல இங்கும் நடந்து விடும், போய் விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு ஆசிரியர் சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அனைத்து ஆசிரியர்களும் வகுப்புகளுக்குப் போகாமல் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆசிரியர் சுப்பிரமணி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். இருவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். இரு மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரையும் மதுரை மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீஸார் சேர்த்தனர்.
தற்போது இந்த இரு மாணவர்களையும் கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து விட்டனர். இதனால் இருவரும் பள்ளி மூலமாக தேர்வு எழுத முடியாது. தனித் தேர்வர்களாகத்தான் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சம்பவத்தை சுட்டிக் காட்டி பிளஸ்டூ மாணவர்கள் இருவர் ஆசிரியரை மிரட்டிய செயல் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழகத்திலேயே அதிகஅளவிலான மாணவர் தேர்ச்சியைப் பெற்று வரும் விருதுநகர் மாவட்டத்தில் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications