பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை எரித்துக் கொன்ற கொடூர பெற்றோர் கைது

Subscribe to Oneindia Tamil

திருபபூர்: பிறந்து ஒரே நாள் மட்டுமே ஆன ஆண் குழ‌ந்தையை பெ‌ற்றோரே உ‌யிரோடு எ‌ரி‌த்து கொ‌ன்ற ‌சம்பவம் திருப்பூரில் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்ப‌டு‌த்‌தி உள்ளது.

திரு‌ப்பூ‌ர் மாவ‌ட்ட‌ம் ப‌ல்ல‌ட‌த்தை சே‌ர்‌ந்தவர் இளங்கோ. ப‌னிய‌ன் தொ‌ழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி புவனே‌ஸ்வ‌ரி. இவர்களுக்கு திருமண வயதில் 2 பெ‌ண் ‌பிள்ளைகள் உள்ளனர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் இத்த‌ம்ப‌தியருக்கு அழகான ஆ‌ண் குழ‌ந்தை ‌ஒன்று பிற‌ந்தது. இந்த நிலையில், பிற‌ந்து ஒரு நாளான நிலையில் அக்குழ‌ந்தையை உ‌யிரோடு கு‌‌ப்பையில் போட்டு எ‌ரி‌த்து கொ‌லை செய்துள்ளனர் இளங்கோ தம்பதியினர்.

இது கு‌றித்து தகவ‌ல் அ‌றி‌த்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில் இத்த‌ம்ப‌தி‌கள் தங்களுக்கு திருமண வய‌தி‌‌ல் 2 மகள்கள் உள்ள நிலை‌யி‌ல் தற்போது ஆண் குழ‌ந்தையை பெ‌ற்று‌க் கொ‌ண்டதை அவமான‌மாக கருதி குழந்தையை எரித்து கொன்றதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை பிறந்ததை அவமானமாக கருதிய அப்பெற்றோர், குழந்தைப் பிறப்பைத் தடுக்க எத்தனையோ வழிகள் உள்ள நிலையில் அதில் ஒன்றை கடைப்பிடித்திருந்தால் இந்த அக்கிரமத்தையும் தவிர்த்திருக்கலாமே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+