சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கோவை: சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பீளமேடு சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் எலட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார்.
இவருக்கு சாந்தி(32) என்ற மனைவியும், பிரியதர்ஷினி(8), ஜீவதர்ஷினி(3) என்ற 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கோவை வரும் செல்வராஜ் குடும்பத்துடன் தங்கிவிட்டு திங்கட்கிழமை காலையில் திருப்பூருக்கு புறப்பட்டு செல்வார்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை செல்வராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கப்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, சாந்தியும் அவரது 2 மகள்களும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் புதிய வீடு வாங்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தி இந்த கோர முடிவை எடுத்தது தெரிய வந்தது.
ரூ.2,000 வாடகை வீட்டில் வசித்து வந்த சாந்தி, புதிய வீடு வாங்க விரும்பினார். இதற்காக வெள்ளலூரில் ரூ.91.2 லட்சம் மதிப்பில் புதிய வீடு வாங்க செல்வராஜும், சாந்தியும் முடிவு செய்திருந்தனர். ஆனால் பின்னர் செல்வராஜ் வீடு வாங்க மறுத்துவிட்டார்.
இதனால் வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த சாந்தி, 2 மகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார். அதன்பிறகு தானும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications