ஹைதராபாத்தில் ரூ20 ஆயிரம் கோடி புதையலால் பரபரப்பு

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தின் தலைமை மேலாளர் டி.பி. ராஜூ தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு, ஆந்திர பிரதேச தலைமைச் செயலகம் எதிரே உள்ள பள்ளி வளாகத்தில் பல ஆயிரம் கோடி புதையல் இருப்பதாக தொல்லியல் துறையிடம் 2 மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். இருப்பினும் இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் துறையின் ஒரு குழுவினர் சனிக்கிழமை மாலை பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்டனர். இதையடுத்து இன்று பள்ளிவளாகத்தில் புதையலைத் தேடும் பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்றைய ஆய்வின் போது தங்க நகைகளும் விலை மதிப்பற்ற ஆபரண கற்களும் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதையல் புதையுண்டு கிட்க்கும் பள்ளிக்கூடம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்தது. 12க்கு 12 அடி உள்ள சுரங்கப்பாதையில்தான் இப்புதையல் இருக்கிறது என்று மாநில கருவூல அதிகாரி சென்னா ரெட்டி தெரிவித்துள்ளார்.
புதையலின் பின்னணி
இத்தனை ஆயிரம் கோடி புதையலின் பின்னணி குறித்து வரலாற்று ஆய்வாளர் முகமது சபியுல்லா கூறியுள்ளதாவது:
2-வது உலகப் போரின் போது ஜப்பானின் வான் தாக்குதலில் இருந்து தப்பிக்க வசதி படைத்தவர்கள் தங்களது வீடுகளில் பங்கர்களை அமைத்திருந்தனர்.
இத்தகைய பங்கர் ஒன்று சைபாபாத் கல்லூரி வளாகம் ஒன்று கண்டறியப்பட்டது. இதேபோல் மிண்ட் வளாகத்திலும் இத்தகைய பங்கர்கள் கண்டறியப்பட்டன.
தற்போதைய புதையல் இருக்கும் பள்ளிக்கூடம், வனபர்தி சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது. இந்த சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஐந்தில் ஒரு பங்கு
புதையல் இருப்பதாக சுட்டிக்காட்டிய 9 பேர் குழுவினர், புதையல் இருப்பது உறுதியானால் தங்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு தர வேண்டும் என்று தொல்லியல் சட்டத்தைச் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications