தமிழக மீனவர்களைக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜி.கே. வாசன்
சென்னை: கேரளா கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவி்ததுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேர் இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது குறித்து விசாரணை நடத்த கடற்படை டைரக்டர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். கடற் கொள்ளையர்கள் தாக்குவார்கள் என்று சந்தேகித்தால் அவர்களைத் தாக்கவும் சில விதிமுறைகள் உள்ளன. ஆனால அந்த விதிமுறைகள் இங்கே பின்பற்றப்படவில்லை.
உண்மையில் நடந்தது என்னவென்றும், எத்தனை சூழலில் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதும் விசாரணையில் தான் தெரிய வரும். இந்த குற்றத்தைச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இது குறித்து இத்தாலியில் இருந்து எந்த நி்ர்பந்தமும் இல்லை. நமது மீனவர்களின் உயிர் தான் மிகவும் முக்கியமாகும்.
நம் நாட்டில் பயங்கரவாதத்திற்கு ஒரு முடிவு கெட்ட வேண்டிய தேவை உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications