கிங்பிஷர் விமான சேவை தொடர்ந்து 3-வது நாளாக நிறுத்தம்

பெங்களூரிலிருந்து இயக்கப்பட வேண்டிய 2 விமான சேவைகளை கிங்பிஷர் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது.
விமான சேவைகளை கிங் பிஷர் நிறுவனம் தொடர்ந்து ரத்து செய்து வருவதால் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வாலுக்கு விமான சேவைகள் இயக்ககம் சம்மன் அனுப்பியுள்ளது.
விமான சேவைகளை நிறுத்தியது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் விவரங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் விமான சேவைகள் இயக்ககம் கூறியுள்ளது.
போபாலின் இந்தூர், சத்தீஸ்கரின் ராய்பூர், மேற்குவங்கத்தின் கோல்கத்தா ஆகிய நகரங்களில் தமது சேவைகளையும் கிங் பிஷர் நிறுவனம் நிறுத்திவிட்டது. பாட்னாவிலிருந்து ஒரே ஒரு விமானத்தை மட்டும் இயக்கி வருகிறது.
பாங்காங், சிங்கப்பூர், டாக்கா, காத்மண்டு, லக்னோ, புவனேஸ்வர் ஸ்ரீநகர் மற்றும் ஐதராபாத் நகரங்களிலிருந்து இயக்கப்படும் சேவையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications