கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி-கேரள வைத்தியசாலைக்கு பெரியார் தி.க. கண்டனம்
கோவை: கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரியவைத்திய பார்மசியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெரியார் தி.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த நவக்கரையில் ஆரியவைத்திய பார்மசி உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த 5 நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர் ஆரிய வைத்திய சாலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற இலங்கை நர்சுகள் 5 பேரும் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஆரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருப்பினும், கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி அளித்ததை கண்டித்து கோவையில் திருச்சி ரோட்டில் உள்ள ஆரிய வைத்திய சாலை முன்பு பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த வைத்தியசாலையை நடத்தி வருபவர் தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறார். டேம் 999 படத்தை எடுத்த இயக்குநருக்குப் பாராட்டு விழா நடத்தியவர் இந்த கேரளக்காரர். அதேபோல இப்போது தமிழ் இனத்தை அழித்த சிங்கள இனத்தைச் சேர்ந்த நர்சுகளைக் கூட்டி வந்து பயிற்சி அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications