மீனவர்களைக் கொன்றவர்களுக்கு இந்திய சட்டத்தில் பாதுகாப்பு இருக்கிறதாம்: இந்திய வெளியுறவு அமைசர்
டெல்லி: தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலியர்களுக்கு இந்திய சட்டத்தில் பாதுகாப்பு இருப்பதாக இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிலியோ டெர்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இந்திய மீனவர்களைச் சுட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் இத்தாலி கப்பலைச் சேர்ந்த இரு காவலர்களுக்கும் இந்தியச் சட்டத்திலிருந்து "பாதுகாப்பு' இருக்கிறது.
இப்போதைக்கு இருநாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு எதுவும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே இல்லை என்றார் அவர்.
தமிழக மீனவர்கள் ஜலஸ்டீன், பிங்கி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளத்தை ஒட்டிய கடல் பகுதியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்தது.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையாக உருவெடுத்த நிலையில் படுகொலை செய்த மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் காவலில் கொலைகாரர்கள்
கொல்லம் முதல்நிலை மாஜிஸ்திரேட் கே.பி.ராய் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் இந்திய எல்லைக்கு உள்பட்ட பகுதி இல்லை என்பதால், இந்தியச் சட்டம் அங்கு செல்லுபடியாகாது என்று இத்தாலி காவலர்கள் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை நிராகரித்த மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் மார்ச் 5-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும் இத்தாலி காவலர்களை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று கேரள போலீஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று 3 நாள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதித்தது.
கட்சிகள் போராட்டம்
விசாரணை நடந்து கொண்டிருந்தபோது,இத்தாலிக் காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி, மாஜிஸ்திரேட் வீட்டுக்கு வெளியே காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் இளைஞர் அணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களைப் போலீஸôர் கலைத்தனர். பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய கமாண்டோ போலீஸôர் அங்கு குவிக்கப்பட்டனர்.
இத்தாலி கப்பலால் தொல்லை
இத்தாலிக் கப்பல் கொச்சி துறைமுகத்தின் எண்ணெய் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமாக எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களிருந்து சரக்கை இறக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தாலிக் கப்பலை துறைமுகத்துக்கு உள்பட்ட வெளிப்பகுதியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொச்சி துறைமுகப் பொறுப்புக் கழகம் தெரிவித்திருக்கிறது.
எனினும் அந்தக் கப்பலின் நடமாட்டத்தை கொச்சி கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications