வாசுதேவநல்லூரில் சாதித்ததை சங்கரன்கோவிலிலும் நிகழ்த்துவாரா சதன் திருமலைக்குமார்?
சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சதன் திருமலைக்குமார் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
சட்டசபை தேர்தலை புறக்கணித்த மதிமுக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றது. தனது கட்சி சார்பில் டாக்டர். சதன் திருமலைக்குமார் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். வைகோ மனதில் நிலையான இடத்தைப் பெற்றுள்ள திருமலைக்குமார் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியினர் ஏற்கனவே எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.
அத்தகைய டாக்டர். சதன் திருமலைக்குமார் பற்றி சில தகவல்கள்,
59 வயதாகும் மருத்துவரான சதன் திருமலைக்குமாரின் சொந்த ஊர் சிங்கிலிப்பட்டி. அவரது தந்தை திருமலையாண்டி, தாய் ஆவுடையம்மாள். அவரது மனைவி குமாரி சந்திரகாந்தமும் ஒரு மருத்துவர். அவர்களுக்கு டாக்டர். தாய் விஜயரோகிணி, ஜெயந்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அவர் கடந்த 1991ம் ஆண்டு தென்காசியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார். தொடர்ந்து 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியிலும், 2001ல் சங்கரன்கோவிலிலும் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து 2006ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தபோது வாசுதேவநல்லூரில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications