3-வது நாளாக தொடரும் பத்மநாபாசாமி கோவில் பொக்கிஷம் மதிப்பிடும் பணி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அங்கிருக்கும் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று 3வது நாளாகத் தொடர்கிறது.
தேசிய அருட்காட்சியக பாதுகாப்பு தலைவர் வேலாயுத நாயர் தலைமையிலான மதிப்பீட்டு குழுவினர் பொக்கிஷங்களை கணக்கெடுத்து வருகிறார்கள். கடந்த 20ம் தேதி தொடங்கிய மதிப்பீட்டு பணி நேற்று 2வது நாளாக தொடர்ந்தது. எப் நிலவறை மட்டும் திறக்கப்பட்டு ஆபரணங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள நரசிங்க மூர்த்தி சுவாமியின் பூஜை பொருட்கள், வெள்ளி குடங்கள், தூப பெட்டிகள், நீராஞ்சன் தட்டுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
தொடர்ந்து அதே அறையில் இருந்த பொற்கவசங்கள் மற்றும் தங்க அங்கிகள், சுவாமியின் முக கவசம் உள்பட பெரிய அளவிலான வெள்ளி குடங்கள் ஆகிவயற்றை மதிப்பீட்டு குழுவினர் சரி பார்த்தனர். அப்போது மிகவும் பழமை வாய்ந்த அந்த பொக்கிஷங்களில் பழங்கால தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் குறித்து தொல் பொருள் ஆய்வுக் குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர். அதன்பின்பு அதனை தீவிரமாக படித்து 4 கம்யூட்டர்களில் பதிவு செய்தனர். இதனை கண்காணிக்க சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும் 13 நவீன டிஜிட்டல் கேமராக்களில் மதிப்பீட்டு பணி நடப்பது கோவிலில் உள்ள கட்டுபாட்டு அறையில் தெரிவதற்கும் அதனை உடனடியாக பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று 3வது நாளாக தொடர்நது பொக்கிஷங்கள் மதிப்பிடப்படுகிறது. தற்போது எப் அறை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மற்ற 5 அறைகளை திறப்பது குறித்து நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.












Click it and Unblock the Notifications