நள்ளிரவில் தடியடி: டெல்லி போலீஸுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்-ராம்தேவுக்கும்!

Subscribe to Oneindia Tamil

Baba Ramdev
டெல்லி: யோகா குரு பாப ராம்தேவ், தமது ஆதரவாளர்களுடன் ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், போலீஸை இந்த சூழலுக்குத் தள்ளியதாக ராம்தேவையும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

பாபா ராம்தேவ் குழுவினர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4 ம் தேதி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

அன்றைய தினம் இரவு, போராட்டக் குழுவினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் நுழைந்த காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதில், ராம்தேவ்வின் உதவியாளர் ராஜ்பாலா என்ற பெண்மணி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

"தாக்குதல் சம்பவம் கண்டிக்கத் தக்கது. எந்த அசம்பாவித சூழலும் நிலவாத நிலையில் தடியடி பிரயோகித்தது ஏன்?" என்று டெல்லி காவல்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .

மேலும், உயிரிழந்த ராஜ்பாலாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் வழங்கவும் உத்தரவிட்டனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+