சங்கரன்கோவில்: அமைச்சர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுகவின் முத்துச்செல்வி

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துச்செல்வி இன்று பிற்பகல் 1.20 மணிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அவருடன் வேட்பு மனு தாக்கலுக்காக 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வந்தபோதும், தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குள் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இன்று பிற்பகல் தடபுடலாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார் முத்துச்செல்வி. பின்னர் சரியாக 1.20 மணிக்கு அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தாமோதரனிடம் அளித்தார்.

அப்போது அமைச்சர் செந்தூர்பாண்டியன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் முருகையா பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பொறுப்பை வகிக்கும் கண்ணன் ஆகியோர் மட்டும் உடன் இருந்தனர்.

20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வெளியேயே இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+