இடைத்தேர்தல்: வாக்காளர் காலில் விழுந்து ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ஜவஹர் சூரியகுமார் அப்பகுதியில் வாக்கு சேகரிக்கையில் வாக்காளர் காலில் விழுந்து ஓட்டு கேட்டார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுகின்றது. அதிமுக, திமுக, மதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணியைப் பார்க்க அதிமுக அமைசச்ர்கள் குழு சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு அதிமுக இலவசங்கள் கொடுத்து வருகிறது. எப்படியும் சங்கரன்கோவிலைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக வேட்பாளரான ஜவஹர் சூரியகுமார் கடந்த 2 நாட்களாக சங்கரன்கோவிலில் உள்ள முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்றும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது தங்கவேலு எம்.பி., பொதுக்குழு உறுப்பினர் சங்கரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் அண்ணாவியப்பன், கணேசன், சவுந்தர், தங்கராஜ் பாண்டியன் ஆகியோர் அவருடன் சென்றனர்.

சங்கரன்கோவில் மாதா கோவில் தெருவில் வாக்கு சேகரிக்கையில் ஒரு வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்த வாக்காளரின் காலில் விழுந்து சூரியகுமார் ஓட்டு கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத அந்த வாக்காளர் அதிர்ச்சி அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+