பிரபல பத்திரிக்கையாளர் கொலை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!

இது குறித்து சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
லண்டனில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் பிரபல செய்தியாளராக சிரியாவில் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த போது சிரிய படைகளின் தாக்குதலால் மேரி கொல்வின் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு துணிச்சல் மிகுந்த செய்தியாளரான மேரி, கொசோவோ, செச்சினியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் முனைகளில் செய்தியாளராகப் பணியாற்றி உள்ளார். அவர் இலங்கையில் பணியாற்றிய போது இலங்கை படையினரின் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தார்.
போர் பிரதேசங்களில் பெண்கள், சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் குறித்த செய்திகளை வெளிக்கொணரந்து உலகின் கண்களுக்கு கொண்டு வருவதில் அவர் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இலங்கை போரின் இறுதிக் கணங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினருக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொடுத்த மேரி கொல்வின், இலங்கை அரசு செய்த யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து சாட்சியாகவும் இருந்தார்.
சமீபகாலமாக ஐனாதிபதி அசாத் தலைமையிலான சிரிய அரசு, தமது நாட்டில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அங்கு நடைபெறும் பயங்கரவாதத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியதில் மேரி கொல்வினின் பங்கு அளப்பது அரிது. அவரது முயற்சி முடிவுடையும் முன்னரே அவர் கொல்லப்பட்டு உள்ளார்.
சர்வதே மனித உரிமை விதிகளை மதிக்காது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிரிய அரசாங்கத்தை கண்டிப்பதுடன், இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை சர்வதேச தமிழ் செய்தியாளர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
கடமை உணர்வுமிக்க துணிகரமான ஒரு ஊடகவியலாளரை இழந்து தவிக்கும் சக ஊடவியலாளர்களுக்கும், மேரி கொல்வின் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications