முதல்வர் ஜெயலலிதாவுக்காக அங்கப்பிரதட்னம் செய்த அதிமுக நிர்வாகி செந்தில்நாதன்
கரூர்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் அதிமுக பிரமுகர் செந்தில்நாதன் அங்கப்பிரதட்சனம் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (24.2.2012) காலை 10 மணியளவில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் மாநில செயலாளர் செந்தில்நாதன் கரூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்தார். மேலும் கரூரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கினார்.
இதேபோல அதிமுக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சார்பில், 64 கிலோ கொண்ட கேக் வெட்டி ஏழை எளியவர்களுக்கு கொடுத்தனர். மேலும் ஒரு திரையரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் 4 காட்சிகளும் ரசிகர்களுக்கு இலவசமாக காட்டப்பட்டது. கோவில்களில் அன்னதானம், இலவச வேஷ்டி, சேலை என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications