கொள்ளையர்களை சுட்டுத்தள்ளவே போலீஸார் நினைத்தனர்: ஹென்ரி திபேன் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுடடுக் கொன்றதற்கு மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்ரி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த கொடூரச் சம்பவம் சென்னை மாநகர காவல்துறையின் தரம் எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உள்ளது. அவர்களை உயிருடன் பிடிக்க சென்றிருந்தால் அவர்களை உயிருடன் பிடித்திருக்க வேண்டும். அந்த கொள்ளையர்களின் சரித்திரத்தை மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதிகாலையில் சம்பவம் நடந்தும் காலை 6 மணி வரை அந்த பகுதியில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதது காவல் துறை எதையோ மறைப்பதற்காக நடத்திய நாடகமாகவே தெரிகிறது.
கொல்லப்பட்ட 5 பேரில் ஒருவரை மட்டும் யார் என்று வீடியோ கிளிப்பிங்கில் காட்டினார்கள். மீதமுள்ள 4 பேர் யார், அவர்களுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளதா, இல்லையா. இல்லை அவர்கள் அந்த வீட்டில் இருந்த சாதாரண ஆட்களா என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
கொள்ளையர்களை சுட்டுக்கொன்றதற்கு போலீசார் கூறியுள்ள காரணம் நாடகச் செயலாக உள்ளது. இது குறித்து மனித உரிமை ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாய் கூண்டில் 20 சிறுமிகள்... மொத்தம் 700 ஆண்களால் பாதிப்பு! பிரிட்டனை உலுக்கிய பெண்ணின் வாக்குமூலம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications