அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு இருண்டமாநிலமாகிவிட்டது: திருமாவளவன்
கோவில்பட்டி: அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு இருண்டமாநிலமாகிவிட்டது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஜெயலலிதா சவால் விட்டு அதி்முக வெற்றிக்காக 32 அமைச்சர்களையும் களம் இறக்கியுள்ளார்.
இருண்டமாநிலம்
ஜெயலலிதாவின் சவாலை முறியடித்து திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதி்முக ஆட்சியில் தினமும் 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதனால் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறி விட்டது. பல்வேறு கட்டண உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை என்கவுன்ட்டர்
தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கெட்டு வி்ட்டது. தமிழகமே கொலை, கொள்ளை மாநிலமாக மாறி விட்டது. வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரையும் காவல் துறையினர் உயிரோடு பிடித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்களை சுட்டு கொன்றது மனித உரிமை மீறிய செயலாகும் என்றார் திருமாவளவன்












Click it and Unblock the Notifications