பொக்கிஷம் குவிந்துள்ள பத்மநாபசுவாமி கோயில் 'சி' அறையும் திறக்கப்பட்டது!

பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த 20ந் தேதி தொடங்கியது. மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுதன் நாயர் தலைமையில் இப்பணி நடக்கிறது.
முதலில் ‘ சி‘ ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அறையை திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் பூட்டி சீல் வைத்து இருந்ததால் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த ‘இ, ‘எப்’ அறைகள் முதலில் திறக்கப்பட்டன. இந்நிலையில் ‘ சி‘ ரகசிய அறையை திறக்க கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அறை இன்று திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி வரை வல்லுநர் குழு உறுப்பினர்கள் பொக்கிஷங்களை மதிப்பிடுவர்.
ஏற்கனவே "சி" அறையைத் திறந்தால் சுனாமி அல்லது பேரழிவு ஏற்படும் என்று வதந்தி கிளப்பப்பட்டிருப்பதால் திருவனந்தபுரம் உட்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு அறை
இதனிடையே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க சிறப்பு அறை கட்டப்பட உள்ளதாக மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உயர்நிலைக்குழுவின் தலைவர் வேலாயுதம் நாயர் கூறியதாவது: பொக்கிஷங்களுக்கான் சிறப்பு அறை எங்கு கட்டப்பட உள்ளது மற்றும் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட உள்ளது குறித்த அறிக்கை 3 வாரத்தில் தயாரிக்கப்படும். பின்னர் இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications