வாக்குப் பதிவு முடிந்த உடனேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டிசம்பர் 1-ம் தேதிதான் பெட்ரோல் விலை கடைசியாக உயர்த்தப்பட்டது. அப்போது சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 109 டாலராக இருந்தது.
இப்போது 125 டாலராக உயர்ந்துள்ளது.
பெட்ரோலுக்கு மட்டும் பெட்ரோலியத் தொழில் நிறுவனங்களே விலையை அவ்வப்போது மாற்றியமைக்கலாம் என்று அரசு அதிகாரம் வழங்கியுள்ள போதிலும் 5 மாநிலங்களில் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறும்போது விலையை உயர்த்தினால் ஆளும் கூட்டணிக்கு தோல்வி ஏற்படும் என்பதால் அரசுத்துறை நிறுவனங்களின் தலைவர்களே அந்த முடிவை ஒத்திப்போடுவது வழக்கமாகிவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது
பெட்ரோல் விலை மட்டும் அல்ல டீசல் விலையும் இந்த முறை உயர்த்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 12-ந் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே டீசல் விலையும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. விலையை உயர்த்தாமல் விற்பதால் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.12.77-ம் கெரசினுக்கு (மண்ணெண்ணெய்) ஒரு லிட்டருக்கு ரூ.30.21-ம், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் ரூ.378-ம் அரசுக்கு நட்டம் ஏற்படுகிறது என்பது அதிகாரிகளின் கருத்து.
இப்படி விலை குறைத்து விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்றாடம் ரூ. 410 கோடி இழப்பு ஏற்படுகிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
