போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது எனக்கு தனி அன்பு-ஜெயலலிதா
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கரூரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் இடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் பாராட்டினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே கபடி, கோகோ, கைப்பந்து மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 222 பேர் கொண்ட 24 குழுக்களுக்கு 372 கிராம் தங்க காசுகள், 24 கோப்பைகள் மற்றும் 222 சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அதே போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 21 மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்த 40 பேர் கொண்ட 4 குழுக்களுக்கு 140 கிராம் தங்க காசுகள், 4 கோப்பைகள் மற்றும் 40 சான்றிதழ்களை வழங்கினார்.
ஆக மொத்தம் 262 பேர் கொண்ட 28 குழுக்களுக்கு 512 கிராம் அதாவது 64 சவரன் எடையுள்ள தங்க காசுகள், 28 கோப்பைகள் மற்றும் 262 சான்றிதழ்களையும் வழங்கினார்.
சிறப்பாக விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா பாராட்டினார். சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி, சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சு உள்ளது. இந்த நிலையில் 'அம்மா'விடமிருந்து பாராட்டைப் பெற்று விட்டதால் செந்தில் பாலாஜி பெரும் உற்சாகத்தில் இருக்கிறாராம்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது எனக்கு தனி அன்பு-ஜெ:
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி அன்பு உண்டு.
உங்கள் பணியே மிகவும் கடினமானது. இதற்கிடையில், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications