வேலூரில் இப்போதே சுட்டெரிக்கும் வெயில்-100 டிகிரியைத் தொட்டதால் மக்கள் அவதி
வேலூர்: தமிழகத்தில் கோடை காலம் வேகமாக பிக்கப் ஆக ஆரம்பித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இரவிலும், அதிகாலையிலும் பனி இருந்தாலும் பகலில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தலைநகரான வேலூரில் இப்போதே 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
கோடைகாலம் பெரும்பாலும் மார்ச் மத்தியில்தான் சுட்டெரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இப்போதே தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வெளுக்க ஆரம்பித்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் வேலூரில் இப்போதே 100 டிகிரியை வெயில் தாண்டியுள்ளதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
கத்திரி வெயில் காலத்தின்போது வேலூரில் வெயில் அளவு 110 டிகிரி வரை வெளுத்துக் கட்டும். ஆனால் இந்த ஆண்டு அதை விட அதிகமாக இருக்குமோ என்று மக்கள் பயப்படும் அளவுக்கு இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது.
இந்த ஆண்டு வேலூரில் பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல்முறையாக 100 டிகிரியைத் தொட்டது.
வெயில் வெளுத்துக் கட்டி வருவதால் குளிர்பான விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கூடவே மோர், இளநீர் விற்பனையும் பிக்கப் ஆகியுள்ளது. சாலையோரங்களில் மோர், இளநீர், நுங்கு போன்றவற்றின் விற்பனையைப் பார்க்க முடிகிறது. மக்கள் வெயிலுக்குப் பயந்து தொப்பி, முக்காடு உள்ளிட்டவற்றுக்கு மாறி வருகின்றனர்.
ஒருபக்கம் வெயில் வறுக்கிறது என்றால் மறுபக்கம் மின்தடை வேறு மக்களை வெறுப்படிக்க வைத்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications