சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டாராம் சுப்பிரமணியன் சாமி

ஆந்திர மாநிலம் நகரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட் டேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முழுமையாக விசாரித்தால் இந்த உண்மைகள் வெளிவரும்.
உலக அளவில் மருத்துவத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறி விட்டது. ஆனால் சோனியாகாந்தி தனது மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்வது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கருதுகிறேன் என்றார் அவர்.
232 பக்க மனு
இதனிடையே சி.பி.ஐ.யிடம் சுப்பிரமணிய சாமி 232 பக்க புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ராஜீவகாலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாயகன் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை சாமி விளக்கியுள்ளார்.
ராஜீவும் சோனியாவும் குவாத்ரோச்சியை 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாக அவர்களது சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரி 1997-ல் கூறியிருந்ததையும் சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
ராசீவ் மறைவுக்குப் பிறகு சோனியாவும் குவாத்ரோச்சியும் 20க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாகவும் சாமி குறிப்பிட்டுள்ளார்.
சோனியாவும் ராகுல்காந்தியும் சிபிஐ துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் சாமி தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications