மின்வெட்டிலிருந்து தப்பி வந்தது நீலகிரிக்கும் 'ஆப்பு'-இன்று முதல் 4 மணி நேரம் கட்!
ஊட்டி தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதுமே மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதிலிருந்து தப்பி வந்த நீலகிரி மாவட்டத்திலும் இன்று முதல் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு தினசரி 4 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஷிப்ட் போட்டு மின்தடையை அமல்படுத்தி வருகின்றனர். சென்னையில் குறைந்தது 2 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமலாவதாக கூறப்படுகிறது. மாவட்டங்களில் குறைந்தது 8 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
அதேசமயம், நீலகிரி மாவட்டம் மட்டும் இது நாள் வரை மின்வெட்டிலிருந்து தப்பி வந்தது. இன்று முதல் அவர்களுக்கும் ஆப்படித்து விட்டார்கள். அங்கு இன்று முதல் தினமும் 4 மணி நேரம் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் பயிரிடும் தேயிலையை தொழிற்சாலைகளுக்கு அனுப்புவது வழக்கம். இன்று முதல் அமல்படுத்தப்படும் மின்வெட்டால் தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
ஏற்கனவே பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஏராளமான தேயிலை தொழிலாளர்கள் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலை தேடி சென்றனர். திருப்பூர் பகுதியிலும் கடும் மின் வெட்டு நிலவியதால் மீண்டும் ஊருக்கு திரும்பினார்கள்.
தற்போது நீலகிரி மாவட்டத்திலும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்களுக்கு பேரிடியாக உள்ளது.
மின்விடுமுறை அமலுக்கு வந்தது
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளுக்கான வாராந்திர மின் விடுமுறை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் வாரம் ஒரு நாள் முழுமையாக மின்சாரம் இருக்காது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications