காதலனுடன் சென்ற மகள் : அவமானம் தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை
குமரி: எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற மகளின் செயலால் அவமானம் அடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
குமரி மாவட்டம் மண்டைக்காட்டை அடுத்த மூத்தாருன்னி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை(55). கூலித்தொழிலாளியான அவருக்கு ஜெயா(44) என்ற மனைவியும்,
சுபா(18) என்ற மகளும் உள்ளனர்.
நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த சுபா தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். அப்போது தக்கலையைச் சேர்ந்த வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர்.
இது குறித்து அறிந்த சுபாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சுபா தனது காதலருடன் சென்றுவி்ட்டார். மகள் காதலனுடன் சென்றதால் அவமானம் தாங்க முடியாத ஜெயா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்டைக்காடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுந்தரம் பிள்ளையின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தனர். வீட்டிற்குள் இருந்து பதில் எதுவும் வராததால் கதவின் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது சுந்தரம் பிள்ளை வாயில் நுரை தள்ளிய நிலையி்ல் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மகளின் பிரிவு, மனைவியின் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் மனமுடைந்ததால் சுந்தரம்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications